உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுசுக்கு ஜோடியான மேயாதமான் இந்துஜா!

தனுசுக்கு ஜோடியான மேயாதமான் இந்துஜா!

மேயாதமான் படத்தில் அறிமுகமானவர் இந்துஜா. அதன்பிறகு மெர்குரி, பூமராங், பிகில் உள்பட சில படங்களில் நடித்தவர் தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் நானே வருவேன் படத்தில் இந்துஜா இணைந்திருக்கிறார். இந்த படத்தில் இந்துஜாதான் நாயகி என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ள இந்துஜா, நானே வருவேன் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !