உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமர்சனங்களை மீறி வசூலிக்கும் 'அரண்மனை 3'

விமர்சனங்களை மீறி வசூலிக்கும் 'அரண்மனை 3'

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திறக்கப்பட்டன. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் அதிகம் வரவில்லை.

விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'கோடியில் ஒருவன்' படத்திற்கு ஓரளவிற்கு ரசிகர்கள் வந்தனர். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'டாக்டர்' படத்திற்கு அந்த எண்ணிக்கை அதிகமானது. அதை கடந்த வாரம் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட மூன்று படங்களுக்குமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இருந்தாலும் இப்படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று வெளிவந்த 'அரண்மனை 3' படம் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் 4 நாட்களில் சுமார் 15 கோடி வரை வசூலித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத இருக்கை அனுமதியில் இது பெரிய வசூல் என்கிறார்கள். நாளையும் விடுமுறை நாள் என்பதால் இன்னும் வசூல் கூடுதலாகலாம்.

'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படமும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படமாக அமையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !