இளையராஜா ஸ்டூடியோவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் ரஜினி
ADDED : 1495 days ago
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மட்டும் வெளியில் வந்தார்.
இளையராஜாவின் புது ஸ்டூடியோ ரஜினியின் மனதுக்கு நெருக்கமான இடமாகி விட்டதாம். வாரத்துக்கு ஒரு முறையாவது இளையராஜா ஸ்டூடியோவுக்கு சென்று வருகிறார். இளையராஜாவுடன் மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசுகிறாராம். “நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்குத் தொந்தரவா இல்லையே...” எனக் கடந்த வாரம் ரஜினி கேட்க, “நீங்க வர்றது எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு” என்றாராம் இளையராஜா.