ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 1504 days ago
நடிகை நயன்தாரா, அண்ணாத்த படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல், காட்பாதர், ஷாரூக்கான் படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது காதலரான டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் நயன்தாரா, தற்போது மும்பையில் உள்ள மகாலட்சுமி, சித்தி விநாயக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷீரடிக்கு சென்று சாய் பாபாவின் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். சமீபகாலமாக விக்னேஷ் சிவனுடன இணைந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வருகிறார் நயன்தாரா.