உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆரம்பத்தில் கேலி செய்தனர்

ஆரம்பத்தில் கேலி செய்தனர்

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக உயர்ந்துள்ளார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் நிறைய ஆல்பங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான குட்டி பட்டாசு ஆல்பம் 13 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அடுத்து வெளியான அடிபொலி, யாத்தி யாத்தி ஆல்பங்களும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஆல்பங்களில் நடிப்பது குறித்து அஸ்வின் கூறுகையில், ‛‛ஆரம்பத்தில் இதுபோன்று ஆல்பங்களில் நடித்தபோது பலரும் கேலி செய்தனர். ஆனால் இப்போது இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படங்களில் நடித்தாலும் தொடர்ந்து ஆல்பங்களிலும் நடிப்பேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !