உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜகமே தந்திரம்' வழியில் 'மாறன்'?

'ஜகமே தந்திரம்' வழியில் 'மாறன்'?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்து ஓடிடியில் வெளியான படம் 'ஜகமே தந்திரம்'. வெளியீட்டிற்கு முன்பு இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளியானதும், இப்படி ஒரு படமா என கார்த்திக் சுப்பராஜை ரசிகர்கள் விமர்சித்தனர்.

அதற்குப் பிறகு தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்து முடித்தார். கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சில பல பிரச்னைகளை கடந்து இப்படம் ஒரு வழியாக படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க விரும்பாமல் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடி நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதாம். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !