சொகுசு விமானத்தில் பறந்த ராய் லட்சுமி
ADDED : 1557 days ago
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் லட்சுமி ராய். அஜித் உடன் மங்காத்தா படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. லட்சுமி ராய் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். கடைசியாக ஸ்ரீகாந்த் உடன் மிருகா, தனி நாயகியாக சிண்ட்ரெல்லா படங்களில் நடித்திருந்தார். இவை பெரிதாக போகவில்லை. சினிமாவில் பட வாய்ப்புகளை பெற தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சொகுசு விமானம் ஒன்றில் பறக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.