விழிப்புணர்வுக்காக இணையும் அனிருத் - அறிவு
ADDED : 1503 days ago
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் மூலம் பிரபல்மானவர் தெருக்குரல் அறிவு. எஞ்சாயி எஞ்சாமி தனிப்பாடல் இவரை சர்வதேச அளவில் கொண்டு சென்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய பாடகராக வலம் வரும் அறிவு, அஜித்தின் வலிமை பத்திலும் பாடி இருக்கிறார். இந்நிலையில் அறிவும், முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து தனிப்பாடல் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக உருவாகும் இந்த பாடலை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது.