உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா படத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா

நயன்தாரா படத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா. புதுப்பது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 900 படங்களில் நடன இயக்குநராக இருந்துள்ளார். கிட்டதட்ட 6000 பாடல்களை இயக்கியவர் இப்போதும் அதே வேகத்தில் இயங்குகிறார். சின்னத்திரை மானாட மயிலாட முதல் பல வருட அனுபவம் பெற்றவர் . பல நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தியவர். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருக்கும் இவர் எத்தனையோ பேர் நடிக்க கேட்டும் மறுத்தவர் இப்போது நயன்தாராவுக்காக நடிகையாகவும் மாறி உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இது பற்றி நம்மிடம் பேசிய கலா, ‛‛பிசி.ஸ்ரீராம் உட்பட நிறைய பேர் என்னை நடிக்க அழைத்த போது மறுத்த நான் தோழி நயன்தாரா, நண்பர் விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டேன். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு மிகவும் முக்கியமான வேடம். கதை கேட்டதுமே விழுந்து விழுந்து சிரித்தேன். நல்ல காமெடி கதை. தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !