தீபாவளிக்கு பிறகு வருகிறது கொம்பு வச்ச சிங்கம்டா
ADDED : 1444 days ago
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா. சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தர் குமார் தயாரித்துள்ளர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது அச்சுறுத்தல் குறைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதால் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். தீபாவளி அலைகள் ஓய்ந்த பிறகு நவம்பர் 26ம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள்.