வலிமை வில்லனுக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ்
ADDED : 1444 days ago
ஒருநாள்கூத்து, டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெட், பாகல் என்ற இரண்டு படங்கள் வெளியாகின. இந்த படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் நல்ல கதைகளாக மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு அழுத்தமான வேடமாம். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.