மகன்களுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா
ADDED : 1441 days ago
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தற்போது கருடவேகா படத்தை இயக்கிய பிரவின் சந்த்ரு இயக்கும் தி ஹோஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை குல் பனாக் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்னினேனி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
இதேப்போல சைதன்யா கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்து வரும் பங்கர்ராஜு படத்தில் அவரது இன்னொரு மகன் நாக சைதன்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு படங்களிலும் இரு மகன்களும் மகன்களாக நடிக்கிறார்களா, வேறு கேரக்டரில் நடிக்கிறார்களா என்ற தகவல் வெளியாகவில்லை. தந்தையும், மகன்களும் இணைந்து நடிப்பதால் இரு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.