அஜித்துடன் மோதுகிறார் தனுஷ்
ADDED : 1444 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹூமா குரோஷி நாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் நடைபெற இருந்த வலிமை இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால் வலிமை ரிலீசை 2022 பொங்கலுக்கு மாற்றி வைத்து விட்டனர்.
இந்தநிலையில் பொங்கலுக்கு வலிமையுடன் விஜய்யின் பீஸ்ட் மோதுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தபோதும் அதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் தற்போது தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.