100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி
ADDED : 1491 days ago
தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து தியேட்டரிலும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு, தியேட்டரில் 100 சதவீத இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.