ஜெயிலை கைப்பற்றிய ஞானவேல்ராஜா
ADDED : 1444 days ago
வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியவர் ஜிவி.பிரகாஷ். அதன்பிறகு சில வருடங்களுக்கு முன் ஹீரோவாக புரமோஷன் பெற்ற ஜி.வி.பிரகாஷ், தற்போது வசந்தபாலன் இயக்கத்திலேயே ஜெயில் என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் ராதிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு திரையிட்டு காட்டினார்கள். படத்தை பார்த்த அவர், இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கைப்பற்றியுள்ளார்.