நாகார்ஜூனா படத்தில் இணைந்த அமலாபால்!
ADDED : 1490 days ago
தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் படம் தி கோஸ்ட். இந்த படத்தை பிரவீன் சாத்தாரு இயக்குகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஆனால் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய காஜல்அகர்வால் தான் கர்ப்பமாக இருப்பதால் அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதனால் அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க தமன்னாவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தி கோஸ்ட் படக்குழு கேட்ட அதே தேதியில் தமன்னா வேறு தெலுங்கு படத்திற்கு கால்சீட் கொடுத்திருப்பதால் அவர் அப்படத்தில் இணைய முடியவில்லை.
அதனால் தற்போது தி கோஸ்ட் படத்தில் காஜல் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க அமலாபால் கமிட்டாகியிருக்கிறார். விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.