ஆர்ஆர்ஆர் ரிலீஸ் எதிரொலி; பின்வாங்கிய மகேஷ்பாபு - பவன்கல்யாண்!
ADDED : 1444 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள மெகா படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குழப்பத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 7-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சங்கராந்திக்கு ரிலீசாக இருந்த பவன் கல்யாண்-ராணாவின் பீமா நாயக் படத்தை 2022 மார்ச் மாத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. திட்டமிட்டபடி வருகிற ஜனவரி 14-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.