கணவருடன் பொற்கோவில் தரிசனம் செய்த யாமி கவுதம்
ADDED : 1540 days ago
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்தார்.
கொரோனா காலகட்டம் என்பதால் அப்போது கணவருடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த யாமி கவுதம், தற்போது தம்பதி சகிதமாக பல இடங்களுக்கு சுற்றுலா கிளம்பி விட்டார். அந்தவகையில் சமீபத்தில் அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள யாமி கவுதம், பொற்கோவில் பின்னணியில் தெரியும்படி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.