புரமோஷனுக்காக திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ரிது வர்மா
ADDED : 1444 days ago
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது அலட்டல் இல்லாத, சற்றே நெகடிவ் சாயல் கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொளையடித்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக வருடு காவலேனு என்கிற படத்தில் நடித்துள்ளார். நதியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
அதனையொட்டி சமீபத்தில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தி அதில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டேவை கலந்துகொள்ள செய்து புரமோஷன் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து புரோமோஷனின் ஒரு புதிய நிகழ்வாக தற்போது ஒரு திருமண நிகழ்வுக்கு நாக சவுர்யாவும் ரிது வர்மாவும் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியதோடு, அங்கே நடைபெற்ற சில சடங்கு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொண்டனராம்.