அண்ணாத்த டிரைலர் நாளை ரிலீஸ்
ADDED : 1439 days ago
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதிபாபு, யோகிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛அண்ணாத்த'. கிராமத்து கதையுடன் பக்கா குடும்ப சென்டிமென்ட் படமாக தயாராகி உள்ளது. ஏற்கனவே படத்தில் நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி டிரைலர் நாளை(புதன்கிழமை, அக்.,26) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.