உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டெக்ஸ்லா' கதை இதுதானா?

'டெக்ஸ்லா' கதை இதுதானா?


'லால் சலாம்' படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படம் 'டெக்ஸ்லா'. கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. முக்கியமாக இது ஒரு கிராமத்து விஞ்ஞானியின் கதை என்கிறார்கள். 1881ம் ஆண்டில் மாற்று மின்னோட்டத்தின் கொள்கைகளைக் கண்டுபிடித்த செர்பிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மின் பொறியாளர் பெயர் 'டெஸ்லா'. இவரது பெயரில் வரும் எஸ் என்ற எழுதிற்கு பதிலாக எக்ஸ் எழுத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. டெக்ஸ்லா மாதிரி ஒரு விஞ்ஞானியாக வரத் துடிக்கும் ஒரு மனிதனின் கதை என்கிறார்கள். அந்த கிராமத்து விஞ்ஞானியாக சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கிறார். அவரது மகனாக ஜெய் நடிக்கிறார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !