உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவீனா டாண்டனுக்கு பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய கேஜிஎப் இயக்குனர்

ரவீனா டாண்டனுக்கு பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய கேஜிஎப் இயக்குனர்

தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து ரிலீஸாகவுள்ள கேஜிஎப் 2 படத்தில் ராமிகா சென் என்கிற பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.

நேற்று ரவீனா டாண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் 2 படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், அவருக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார் அதில், :ராமிகா சென் கதாபாத்திரத்தை நீங்கள் செய்தது போல வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஜாலியான, மனதுக்கு நெருக்கமான ஒரு பிரதமருடன் வேலை பார்த்த அனுபவம் எனக்கு கிடைத்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !