முதல்வரை சந்தித்த ரஜினி மகள்
ADDED : 1489 days ago
கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் இளைய மகள் செந்தர்யா. இவர் கடந்த திங்களன்று ஹூட் செயலியை அறிமுகம் செய்தார். எழுத படிக்க தெரியாதவர்கள் கூட இந்த செயலி மூலம் தங்களது சொந்த குரலில் பேசி தாங்கள் சொல்ல விஷயத்தை பகிரலாம். இந்த ஹூட் செயலியில் ரஜினிகாந்த் முதல் முதலாக பேசி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ள சவுந்தர்யா ரஜினி, ஹூட் ஆப் குறித்து அவரிடம் விளக்கியதோடு, அவரது வாழ்த்தையும் பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.