மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
1436 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1436 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1436 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1436 days ago
ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அடுத்ததாக திரையுலகில் காதல் திருமணம் செய்யலாம் என் நினைப்பவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, நடிகை சமந்தா மற்றும் அவரது தனது கணவர் நாகசைதன்யாவின் திருமண முறிவு அமைந்துவிட்டது. ஆனால் அதன்பின் சோர்ந்து போய் வீட்டிலேயே அமர்ந்து விடாமல், படப்பிடிப்பு, புனித தளங்களில் வழிபாடு என பிஸியாக சுற்றி வருகிறார் சமந்தா. இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார் சமந்தா..
அதில், “உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவளது கல்விக்கு செலவிடுங்கள். முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்” என ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் சமந்தா.
1436 days ago
1436 days ago
1436 days ago
1436 days ago