உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / க்ளைமாக்ஸ் மோதலில் பவன் கல்யாண்-ராணா

க்ளைமாக்ஸ் மோதலில் பவன் கல்யாண்-ராணா

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது பீம்லா நாயக். பிஜுமேனன் - பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் பவன் கல்யாணும், ராணாவும் நடித்து வருகின்றனர். சாஹர் சந்திரா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கும் ஒய்வு பெறப்போகின்ற கட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு நடக்கும் ஈகோ மோதல் தான் படத்தின் கதை.

இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் பலர் முன்னிலையில் மார்க்கெட் பகுதியில் பிஜுமேனனும் பிரித்விராஜும் மோதிக்கொள்ளும் காட்சி ரசிகர்களை டென்சனுடன் நகம் கடித்தபடி இருக்கை நுனியில் அமர வைத்தது. தற்போது தெலுங்கு ரீமேக்கிற்காக அதேபோன்ற சண்டைக்காட்சியில் பவன் கல்யாணும் ரானாவும் நடிக்க கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. சண்டைக்காட்சி இடைவேளையின்போது கயிற்று கட்டிலில் பவன் கல்யாணும் மாட்டுவண்டியில் ராணாவும் படுததபடி ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரளாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !