வருங்கால பைக் சாம்பியன்; நடிகர் அஜித்குமார் மகனின் போட்டோ வைரல்
ADDED : 1437 days ago
நடிகர் அஜித்குமார் பைக் ரைடிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.. அவர் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் பைக் சேஸிங்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக பைக் ரைடிங் செய்யும் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் அஜித்குமாருடன் அவரது மகனான ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. இதனை வருங்கால பைக் சாம்பியன் என பதிவிட்டு அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.