உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபுவை பிரமிக்க வைத்த ராஜமவுலி

மகேஷ்பாபுவை பிரமிக்க வைத்த ராஜமவுலி

தற்போது பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போகிறார். இந்த நிலையில், இன்று ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் முன்னோட்டம் ஒன்று வெளியாகியிருக்கிறது. 5 மணி நேரத்தில் 16 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த முன்னோட்டத்தை பார்த்த மகேஷ்பாபுவும் தனது வியப்பினை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், அழகான காட்சிகளைப்பார்த்து வியப்படைந்தேன். ஜஸ்ட் வாவ் அசத்தல். ஆர்ஆர்ஆர் படத்தைப்பார்க்க காத்திருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !