நடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா
ADDED : 1517 days ago
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் ஊர்மிளா மடோன்கர். தமிழில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்திருந்தார். தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்த தீபாவளி பண்டிகையில் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியள்ளார்.