3 பாகமாக உருவாகும் படம்
ADDED : 1485 days ago
பிரவீன் இயக்கி நடிக்கும், ‛போத்தனுார் தபால் நிலையம்' படம் மூன்று பாகமாக வெளியாகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. முதல் பாகம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மற்ற இரண்டு பாகமும் ஒரே கட்டமாக அடுத்தாண்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
இயக்குனர் பிரவீன் அளித்த பேட்டி: தபால் நிலையத்தில் நடக்கும் த்ரில்லிங்கான கதை. 3 பாகமாக எடுத்துள்ளோம். ஒன்று முடிந்து விட்டது. விரைவில் வெளியாகிறது. நானே இயக்கி நடித்துள்ளேன். முதல் பாகத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் புதியவர்களே நடித்துள்ளனர். கதைக்கு தேவைப்பட்டதாலேயே மூன்று பாகமாக வெளியிடுகிறோம். அது படம் பார்க்கும் போது புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.