வனிதா விஜயகுமாரின் புதிய பிசினஸ்
ADDED : 1481 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3, குக் வித் கோமாளி என சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் தற்போது அந்தகன், பிக்கப் ட்ராப் உள்பட சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், ஒரு யுடியூப் சேனல் நடத்தி வரும் வனிதா விஜயகுமார், தற்போது சென்னையில் தனது பெயரிலேயே பெண்களுக்கான உடைகள் மற்றும் மேக்கப் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை திறந்துள்ளார். இந்த தகவலை வனிதா வெளியிட்டதை அடுத்து சில சின்னத்திரை நடிகைகளும் அவரது கடைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.