பென்னி குக் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்பும் சீனு ராமசாமி
ADDED : 1543 days ago
எதார்த்தமான கிராமத்து கதைக்களங்களில் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமான படங்களாக இயக்கி வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து இவர் இயக்கியுள்ள மாமனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் தர்மதுரை-2 பற்றி அறிவிப்பு வெளியானபோது அந்தப்படத்தை நான் இயக்கவில்லை என மறுத்துள்ள சீனுராமசாமி, அடுத்ததாக யார் படத்தை இயக்க உள்ளார் என்றும் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக்கின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க விரும்புகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சீனுராமசாமி