சம்பளத்தை உயர்த்திய சமந்தா!
ADDED : 1432 days ago
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு மன உளைச்சல் காரணமாக யோகா, தியானம், ஆன்மீகம் என்று ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு மற்றும் ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் படம் என தற்போது புதிதாக மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. மேலும், தற்போது சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதன்காரணமாக தமிழ், தெலுங்கில் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவராகியிருக்கிறார்.