சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டப்பிங் தொடங்கியது!
ADDED : 1528 days ago
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். இந்த படத்திலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனே நாயகியாக நடித்துள்ளார்.அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். கல்லூரி பின்னணி கொண்ட கதையில் இப்படம் உருவாகியுள்ளது.
லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் டான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டான் படத்தில் முக்கிய காமெடியனாக நடித்துள்ள சூரிதனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டதாக அப்படத்தின் டைரக்டரான சிபி சக்ரவர்த்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.