ஆக்சன் காட்சிக்காக மீண்டும் ஜார்ஜியா செல்லும் பீஸ்ட் விஜய்
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதத்தை கடந்து விட்டது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது.
அதையடுத்து சென்னை, டில்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதற்காக பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வில்லனுடன் விஜய் மோதும் சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கியத்துவமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.