உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாணிக்காயிதம் படத்தில் இணைந்த சாம் சி.எஸ்

சாணிக்காயிதம் படத்தில் இணைந்த சாம் சி.எஸ்

டைரக்டர் செல்வராகவன் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கப்பட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், சாணிக்காயிதம் படத்தில் இணைவது பெருமையின் உச்சம். இப்படக்குழுவுடன் இணைவது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !