உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலின் விக்ரம் இசை உரிமை விற்பனை

கமலின் விக்ரம் இசை உரிமை விற்பனை

மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. இப்படம் 2022ஆம் ஆண்டு கோடையில் திரைக்கு வர உள்ளது.

மேலும். அனிருத் தான் இசையமைத்த படங்களில் எப்படியாவது இரண்டு மூன்று பாடல்களை ஹிட் பண்ணி விடுவதால் சமீபகாலமாக அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி இருப்பதால் அனிருத் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில் தற்போது சோனி மியூசிக் அதிக தொகை கொடுத்து விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !