உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களுடன் அமர்ந்து அண்ணாத்த படம் பார்த்த ஷாலினி

ரசிகர்களுடன் அமர்ந்து அண்ணாத்த படம் பார்த்த ஷாலினி



சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் ஒரு பக்கம் கொண்டாடிக் கொண்டிருக்க, சிவகார்த்திகேயன் போன்ற திரை உலக பிரபலங்களும் ஆவலுடன் இந்த படத்தை பார்த்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியும் நேற்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் அண்ணாத்த திரைப்படத்தை தனது குழந்தைகளுடன் ரசிகர்களுடன் ரசிகர்களாக பார்த்து ரசித்துள்ளார்.

இதை பக்கத்து வரிசையில் இருந்த ரசிகர் ஒருவர் நேரில் பார்த்ததுடன், படம் முடிந்ததும் ஷாலினியுடன் புகைப்படம் எடுத்து அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியீட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ராஜா சின்ன ரோஜா என்கிற படத்தில் ரஜினியுடன் அப்போது குழந்தை நட்சத்திரமாக இருந்த ஷாலினி இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !