வைரலாகும் ஷாலினி-ஷாம்லி போட்டோக்கள்!
ADDED : 1441 days ago
தமிழ் சினிமாவில் ஷாலினி-ஷாம்லி சகோதரிகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்கள். இதில், ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்க்களம் என கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்தார். நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து விட்டார்.
அதன்பிறகு அவரது தங்கையான ஷாம்லியும் கதாநாயகியாக வீரசிவாஜி என்ற படத்தில் நடித்தார். என்றாலும் அவரால் ஷாலினி போன்று கதாநாயகியாக பிரகாசிக்க முடியவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஷாலினி-ஷாம்லி ஆகிய இருவரும் இணைந்து போட்டோ எடுத்துள்ளனர். அதை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.