அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு!
ADDED : 1439 days ago
2020ல் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த சைலன்ஸ் படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நிவின்பாலி ஷெட்டியுடன் இணைந்து அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அந்த படத்தை மகேஷ் இயக்குவதாகவும் யுவி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம்அறிவித்திருந்தது.
ஆனால் பின்னர் அதுகுறித்த எந்த தகவலும் இல்லை. அதன்காரணமாக திரிவிக்ரம் இயக்கும்படத்தில் கமிட்டாகிவிட்டார் நிவின்பாலிஷெட்டி. இதனால் அனுஷ்கா நடிக்கயிருந்த அந்தபடம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக கருதப்பட்டு வந்தது.இந்நிலையில் அனுஷ்காவின் பிறந்த நாளான (நவம்பர் 7) இன்று அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்ததில் அவர் கையெழுத்திட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.