வதந்திகளை தூள் தூளாக்கிய பிரியாமணி!
ADDED : 1486 days ago
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்திபடங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அதோடு இளவட்ட நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு படுகவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜூவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை என்றொரு சர்ச்சை எழுந்ததோடு, பிரியாமணியைவிட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. அதையடுத்து, முஸ்தபா ராஜூ தன்னை விட்டு பிரியவில்லை என்று சொன்ன பிரியாமணி, கண்டிப்பாக தன்னிடம் திரும்பி வருவார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி கணவர் முஸ்தபாவுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரியாமணி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இதன்காரணமாக பிரியாமணி கணவரை பிரிந்து விட்டதாக வெளியான வதந்திகள் அனைத்தும் தூள் தூளாகியுள்ளது.