சென்னை மழை; சேரன் திடீர் ஆவேசம்
ADDED : 1438 days ago
ஒரு நாள் கனமழைக்கே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விட்டது. சென்னை நகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: மழை பாதிப்பு வந்தால், தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும், 900 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடம் முந்தைய ஆட்சியாளர்கள் வாங்கினார்களே... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா... அந்த பைலை முதல்வர் முதலில் எடுக்கணும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.