பிரபலங்களை அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய கமல்
ADDED : 1437 days ago
தமிழ்த் திரையுலகில் 50 வருடங்களுக்கும் மேலாக நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை தனக்குள் வைத்து தமிழ் சினிமாவில் பல திருப்பங்களை ஏற்படுத்திய கமல்ஹாசன் நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அவருடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலுகத்தில் பிரத்யேக பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை கமல் தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சினிமா பிரபலங்கள், சில முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 11.30 முதல் மதியம் 2 மணி வரை மதிய உணவுடன் கூடிய கொண்டாட்டம் என அந்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், அருண் வைத்யநாதன், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் நரேன், மன்சூரலிகன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், ஆர்த்தி - கணேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பேராசிரியர் ஞான சம்பந்தன், என கமலின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பல மொழிக் கலைஞர்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.