உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டே நாளில் ரூ.50 கோடி வசூலித்த அக்சய் குமார் படம்

இரண்டே நாளில் ரூ.50 கோடி வசூலித்த அக்சய் குமார் படம்

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களெல்லாம் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்தன நிலையில், ஹிந்தியில் அக்சய்குமார், கைத்ரினா கைப் நடித்துள்ள சூர்யவன்ஷி என்ற படம்தான் முதன் முதலாக தியேட்டர்களில் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த படத்தில் அஜய்தேவ்கன், ரன்வீர்சிங் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ரோஷித் ஷெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இப்படம் முதல் நாள் ரூ. 26. 29 கோடியும், அதற்கடுத்த நாள் ரூ.23.85 கோடியும் வசூலித்துள்ளது. இப்படி அக்சய்குமார் படம் இரண்டே நாளில் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதால் பாலிவுட்டில் ரிலீசுக்கு தயார்நிலையில் இருக்கும் மற்ற படங்களையும் அடுத்தடுத்து வெளியிட தயாராகிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !