உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்கா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

அக்கா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் பிரபல மலையாள பட தயாரிப்பாளர். அம்மா நடிகை மேனகா. தற்போது கீர்த்தி சுரேஷ் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான ரேவதி கலாமந்திர் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கு வாஷி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கீர்த்தியின் சகோதரி ரேவதி தயாரிக்கிறார்.

இதுகுறித்து மேனகா கூறியதாவது: எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 34 வது படம் இது. எங்கள் தயாரிப்பில் கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக 3 படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. மூத்த மகள் ரேவதி தயாரிப்பு பொறுப்பேற்கிறார். ஹீரோ டொவினோ தாமஸ். பிரபல சினிமா போட்டோகிராபர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணுதான் இயக்குநர். அவருக்கும் இது முதல் படம். வருகிற 17ம் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !