ஓடிடியில் வெளியானது விஜய்சேதுபதி மகள் நடித்த படம்
ADDED : 1436 days ago
விஜய்சேதுபதி தன் மகள் ஸ்ரீஜாவின் நடிப்பு ஆசையை தீர்த்து வைப்பதற்காக அவரே தயாரித்து நடித்த படம் முகிழ். இதில் விஜய்சேதுபதி, ஸ்ரீஜா ஆகியோருடன் ரெஜினா நடித்திருந்தார். கார்த்திக் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரீவா இசை அமைத்திருந்தார்.
ஒரு மணி நேர சிறப்பு திரைப்படத்தில் ஒரு நாய்குட்டிக்கும், சிறுமிக்கும் இடையிலான கதை இடம் பெற்றது. அதாவது நாயை வெறுக்கும் மகளுக்கு நாயின் அன்பை அவரது தந்தை போதித்து நாயை நேசிக்க வைக்கும் கதை. கடந்த மாதம் ஒரு சில தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.