ஆர்ஆர்ஆர் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது
ADDED : 1428 days ago
பாகுபலி 2வை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தபடம் ஜனவரி 7-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக கீரவாணி இசையில் அனிருத் பாடிய நட்பு பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நாட்டுக்குத்து என்ற இரண்டாவது சிங்கிள் பாடலின் பிரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.