மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா
ADDED : 1473 days ago
தமிழில் ஜெயம் ரவி நடித்த மழை படம் தொடங்கி ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. 2018ஆம் ஆண்டு ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரேவ் கோர்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினமாவில் நடித்து வரும் ஸ்ரேயாவுக்கு கடந்த ஆண்டு லாக்டவுன் நேரத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை சமீபத்தில் அறிவித்த ஸ்ரேயா, தனது மகளுக்கு ராதா என்று பெயர் வைத்திருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். அதையடுத்து கணவர் மற்றும் மகளுடன் இடம்பெற்றுள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வந்த ஸ்ரேயா, தற்போது மகளுடன் தான் கொஞ்சி விளையாடும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.