உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரபரக்க வைக்கும் 'வலிமை' ஆக்ஷன் காட்சி புகைப்படங்கள்

பரபரக்க வைக்கும் 'வலிமை' ஆக்ஷன் காட்சி புகைப்படங்கள்

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'.

இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. செப்டம்பர் மாதம் 'வலிமை' படத்தின் முதல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டார்கள். அந்த டீசரில் இடம் பெற்ற சில ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக இருந்தன. அதே சமயம் அவற்றை சில ரசிகர்கள் 'டிரோல்' செய்தும் இருந்தனர். இப்படியெல்லாம் கூட அஜித் நடித்திருப்பாரா என்றார்கள்.

இந்நிலையில் தற்போது 'வலிமை' படத்தின் ஆக்ஷன் காட்சி புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன. சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அப்புகைப்படங்கள் ரஷியாவில் எடுக்கப்பட்டது போல உள்ளது.

அஜித் ஒரு ரேஸர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு முன்பு கூட சில படங்களில் அவர் டூப் போடாமல் சில ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்று காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள 'வலிமை' ஆக்ஷன் புகைப்படங்களைப் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !