உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெட்ரோ ரயிலில் லட்சுமி மேனன் ஆட்டம்

மெட்ரோ ரயிலில் லட்சுமி மேனன் ஆட்டம்

விக்ரம் பிரபு நடித்த 'கும்கி' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', விஷாலுடன் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், விஜய் சேதுபதியுடன் ரெக்க உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் டில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !