உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவு

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவு

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் 2022 ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது டைரக்டர் பாண்டிராஜ் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு, சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !